my own composition

my own composition Lyrics & Chords

பல்லவி

நிலம் நீ நீர் நீ காற்றும் நீ
வானம் நீ தீயும் நீ எல்லாம் நீ பெண்ணே !

பூமி தினம் சுற்றுவதும்
பெண்ணே அது உன்னால்!
வானம் கை எட்டிவிடும்
பெண்ணே உன் முன்னால்!

எட்டி நடைபோட்டு விடு
எல்லாம் வரும் தன்னால் !
வெற்றி உன்னை தேடிவரும்
அவள் விகடன் பின்னால்!

சரணம் 1

கருவாக்கி உருவாக்கும் தாயாகிறாய்
கைநீட்டி தினம்கொஞ்சும் சேயாகிறாய்!
மடிமீது இளைப்பாறும் துணையாகிராய்
துயரத்தில் தோள்சாயும் தோழியாகிறாய்!

அன்பென்னும் வார்த்தைக்கு அகராதி நீ
அறிவாலே விண்தேடி விளையாடு நீ!

வானம் மழை சிந்துவது
பெண்ணே அது உன்னால்!
பூக்கள் மணம் வீசுவது
பெண்ணே அது உன்னால்!

எட்டி நடை போட்டு விடு
எல்லாம் வரும் தன்னால்!
வெற்றி உனைத் தேடிவரும்
அவள் விகடன் பின்னால்!

சரணம் 2

கிளி இல்லை புலியாக மாறடி
வருங்காலம் சொல்லட்டும் உன் பேரடி!

இனி இங்கு தடை இல்லை புவி ஆலடி
வெண்ணிலவில் பதியட்டும் உன் காலடி!

ஊர்சொல்லும் உடலாலே மெல்லினம் நீ
உண்மையிலே உண்மையிலே வல்லினம் நீ!

வழியில் பல பள்ளம் வரும்
பெண்ணே உன் முன்னால்
வா வா அதைத் தாண்டி விடு
முடியும் அது உன்னால்!

எட்டி நடை போட்டு விடு
எல்லாம் வரும் தன்னால்
வெற்றி உனைத் தேடிவரும்
அவள் விகடன் பின்னால்!

Lyrics by Na.Muthukumar(written for a contest in aval vikatan weekly) Music by Soorya

Comments  


Notify me about subsequent comments



Info

Soorya

by Soorya Prakash

November 05, 2011

Stats